Regional01

மின்னணு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் வகையில், 110 இயந்திரங்களைக் கொண்டு நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில், தேர்தல் பயன்பாட்டுக்காக, முதல் நிலை சரிபார்ப்புக்குப் பின்னர் 5,479 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் செயல்பாட்டினை சரிபார்த்திடும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் பணி நேற்று நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில், ஆட்சியர் ராமன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரம் என அனைத்தும் ஒன்றிணைந்த 110 இயந்திரங்களில், 16 வேட்பாளர்களைக் கொண்டு 1,000 வாக்குகள் பதிவு நடத்தப்பட்டது.

அதில், பதிவு செய்யப்பட்ட வாக்குகள், விவிபேட் இயந்திரத்தில் பதிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. மாதிரி வாக்குப்பதிவில் இன்று (24-ம் தேதி) 55 இயந்திரங்களைக் கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (25-ம் தேதி) அதிகபட்சமாக, 64 வேட்பாளர்களைக் கொண்டு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT