Regional01

மூதாட்டியிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

செய்திப்பிரிவு

வேலூர் சத்துவாச்சாரியில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் சத்துவாச்சாரி குருதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர், சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மல்லிகா (70). இவர், நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்றுவிட்டு நீதி மன்றம் பின்புறம் உள்ள வள்ள லார் செல்லும் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மல்லிகாவின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த மல்லிகா கூச்சலிட்டார். அவரது கூச்சல் கேட்டு அவ்வழியாகச் சென்ற வர்கள் மர்ம நபர்களை விரட்டிச் சென்றனர். அதற்குள் அவர்கள் தலைமறைவாகினர்.

இதுகுறித்து, சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் மல்லிகா புகாரளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT