விவசாய பயன்பாட்டுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட விவ சாயிகளுக்கான குறைதீர்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தனது அலுவலக வளாகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் விவசாயிகளுடன் கலந் துரையாடினார். அப்போது, விவசாயி கள் ஆட்சியரிடம் முன் வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:
விவசாயி: ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்தில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக் கப்படும்.
விவசாயி: ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிப்பட்டு கிராமத்தில் தானிய உலர்களம் அமைக்க வேண்டும்.
ஆட்சியர்: விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
விவசாயி: திருப்பத்தூர் மாவட் டத்தில் அனைத்து விவசாயிகளுக்கு உழவர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.
ஆட்சியர்: நடவடிக்கை எடுக் கப்படும்.
விவசாயி: ஏலகிரி மலையில் கோயிலுக்கு சொந்தமான ஓர் ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். அதை மீட்க வேண்டும்.
ஆட்சியர்: விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: விவசாய பயன் பாட்டுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், விவ சாயப்பணிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. எனவே, பழையபடி 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.
ஆட்சியர்: விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
விவசாயி: வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவது தொடர் கதையாகிறது. இதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆட்சியர்: ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: கந்திலி மற்றும் நாட்றாம்பள்ளி ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டும்.
ஆட்சியர்: அந்தந்த ஒன்றிய பொது நிதியில் இருந்து ஆழ் துளைக் கிணறு அமைக்க தேவை யான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், தோட்டக்கலை துணை இயக்குநர் கண்ணன், கால்நடை உதவி இயக்குநர் நாசர், வேளாண் பொறி யியல் துறை உதவி பொறியாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.