Regional03

ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மீஞ்சூரை அடுத்த சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தருணும், மகள் தேவியும் நேற்று அத்திப்பட்டு ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இருவரது உடல்களையும் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீட்டனர். மீஞ்சூர்போலீஸார் இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT