Regional02

காஞ்சி பகுதியில் வழிப்பறி செய்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அனகாபுத்தூரில் இருந்து நேற்றுமுன்தின இரவு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, 2 பேர் வெங்கடேசனை வழிமறித்து அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு விரட்டியுள்ளனர்.

அவர் கூறிய அடையாளங்களை வைத்து சங்கர் நகர் போலீஸார் அனகாபுத்தூரைச் சேர்ந்த சக்திவேல், விவேக் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT