Regional01

ஊருணியில் கார் மூழ்கி ஒருவர் மரணம்

செய்திப்பிரிவு

காரைக்குடியைச் சேர்ந்தவர் மகாலிங்கமூர்த்தி (46). வெளி நாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார். இவரது மாமியார் இந்திராணி, கடந்த 21-ம் தேதி ராமநாதபுரத்தில் உயிரிழந்தார். இறுதிச்சடங்குக்காக குடும் பத்துடன் ராமநாதபுரம் வந்த மகாலிங்கமூர்த்தி இரவில் ஊருக்கு காரில் புறப்பட்டார்.

காரை அவர் ஓட்டிய நிலையில், உறவினர்கள் இரு வர் அதில் இருந்தனர்.

தேவிபட்டினம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த ஊருணியில் பாய்ந்தது.

இதில் மகாலிங்கமூர்த்தி நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற உறவினர் இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து தேவி பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT