திண்டுக்கல் அருகே ஆரியாஸ் நகரைச் சேர்ந்த நாகராஜன் மனைவி முருகேஸ்வரி. இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
நாகராஜனுடன் இரு சக்கர வாகனத்தில் முருகேஸ்வரி நேற்று காலை பணிக்குச் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் கல்லறைமேடு அருகே சென்றபோது பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் முருகேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி யைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.