கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்பு செழியன், கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் வழங்கினர். 
Regional02

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் கலைநிகழ்ச் சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்பு செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது ஆர்டிஓ., பேசியதாவது:

ஒவ்வொருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக் கூடாது. சாலையில் செல்லும்போது கவனத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும். கொலைகள் ஏதோ ஒரு ஆதாயத்திற்காக நடக்கிறது. ஆனால் எந்த காரணமும் இன்றி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால், ஒரு குடும்பம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த குடும்பம் பத்து ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடுகிறது. எனவே சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவோம். விபத்தினை தவிர்ப்போம். இவ்வாறு ஆர்டிஓ பேசினார்.

இதனைத் தொடர்ந்து எமன், சித்திரகுப்தன் வேடம் அணிந்தவர்கள் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, தலைக் கவசம் அணிய அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT