Regional02

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு நபர் ஆணையத்தில் இதுவரை 616 பேர் சாட்சியம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த ஒருநபர் விசாரணை ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றது. ஆணையத்தில் இதுவரை 616 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம்ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்றபோலீஸ் துப்பாக்கி சூடு, தடியடிமற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்த,உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது.

ஆணையத்தின் 24-வது கட்ட விசாரணை கடந்த 18-ம் தேதி தொடங்கியது. நடிகர்ரஜினிகாந்த் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணை நேற்று முடிவடைந்தது. 31 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகவில்லை. தன்னிடம் காணொலி மூலம் விசாரணை நடத்த வேண்டுகோள் விடுத்து, ரஜினிகாந்த் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுவரை 616 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். 850 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. 25-ம்கட்ட விசாரணை பிப்ரவரி 2 -வதுவாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT