Regional03

பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தம்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் வந்து பிரச்சினைக்குரிய இடத்துக்கு பத்திரப்பதிவு செய்யக் கோரி சார்பதிவாளரிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு சார்பதிவாளர் மறுத்ததால் அவரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீஸார், அங்கு சென்று, தகராறில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் தகராறில்ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பொதுமக்கள், பத்திர எழுத்தர்கள், அரசு ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சங்கரன்கோவிலில் பத்திரம் மற்றும் நகல் எழுத்தர்கள் சங்கத்தினர் நேற்று ஓருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத் தலைவர் மாரியப்பன்,செயலாளர் முத்துகோமதிநாயகம் உள்ளிட்ட பத்திரஎழுத்தர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT