ஆரணி அடுத்த கருகந்தாங்கல் கிராமத்தில் ரேஷன் கடை கட்டுமான பணியை தொடங்கி வைத்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். 
Regional02

ஆரணி அருகே புதிய ரேஷன் கடைகள் கட்டுமான பணி தொடக்கம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எம்பி தாங்கல் மற்றும் கருகந்தாங்கல் கிராமத் தில் தலா ரூ.15.20 லட்சம் மதிப் பில் புதிய ரேஷன் கடைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பூமி பூஜையில் கலந்து கொண்ட, இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “37 நாட்களில் கடைகள் கட்டி முடிக் கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு புதிய கூட்டுறவு கடைகள் திறக்கப்படும்” என்றார்.

இதில், கூட்டுறவு சங்கங் களின் துணைப் பதிவாளர் கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூடுதல் வகுப்பறை

SCROLL FOR NEXT