ஆரணியில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவருக்கு இனிப்பு வழங்கிய டிஎஸ்பி கோட்டீஸ்வரன். 
Regional03

சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் அறிவுரை

செய்திப்பிரிவு

சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட் டீஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடை பெற்றது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் வழங்கினார்.

மேலும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘இரு சக்கர வாக னம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது, கார் உள்ளிட்ட சொகுசு வாகனங்களை ஓட்டும்போது ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும், வாகன ஓட்டிகள் மட்டும் இல்லாமல் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் சாலை விதிகளை அறிந்து, அதனை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT