ராமநாதபுரத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநரக்ளிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கிய போக்குவரத்துத்துறை துணை ஆணையர் இளங்கோவன். 
Regional01

ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி போக்குவரத்து துணை ஆணையர் இளங்கோவன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT