சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர் சங்க தலைவர் மனோகரன் பேட்டி அளித்தார். 
Regional02

தொகுப்பூதிய, தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரமாக்கக்கோரி விரைவில் தொடர் போராட்டம் அண்ணாமலை பல்கலை. ஊழியர் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அண்ணாமலை பல்கலைக்கழ கத்தில் தொகுப்பூதிய ஊழியர் களை பணி நிரந்தரமாக்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பல்கலை. ஊழியர் சங்கத் தினர் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் மனோகரன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியது:

அண்ணாமலை பல்கலை.யில்10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரி யும் தொகுப்பூதியம், தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பதவி உயர்வுஅளிக்க வேண்டும். பணியில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்க வேண்டும்.ஓய்வு பெற்று 8 ஆண்டுகளாகியும் ஊழியர்களுக்கு பணப்பயன்கள் வழங்கவி்லை. அவைகளை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறுமனுக்கள் அளித்தும், போராட்டங்களை நடத்தியும் கோரிக் கைகள் நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக விரைவில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT