Regional02

லஞ்ச வழக்கில் சாட்சி அளிக்க விழுப்புரம் நீதிமன்றத்தில் கோவை போலீஸ் கமிஷனர் ஆஜர்

செய்திப்பிரிவு

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில், கடந்த2013-ம் ஆண்டு, மது கடத்திய காரை விடுவிப்பதற்காக விண் ணான்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அப்போதைய இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சுந்தரமூர்த்தி ஆகியஇருவரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புபோலீஸார் கைது செய்தனர்.

இருவர் மீதும் விழுப்புரம் ஊழல் ஒழிப்பு சிறப்பு நீதிமன் றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் அப்போதைய டிஐஜி சுமித்சரண் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். நீதிபதி மோகன் இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். சுமித்சரண் தற்போது கோவை மாநகர கமிஷனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT