Regional02

கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 5 மாடிக் கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதில் 5-வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நேற்று காலை நடைபெற்றது. அங்கு பணியாற்றிய கூரைக்குண்டுவைச் சேர்ந்த முருகன்(45) தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து சூலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT