தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவையொட்டி, சேலத்தில் மாநகர காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சின்னக்கடை வீதி சாலையில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் அணி வகுத்துச் சென்ற மகளிர் போலீஸார். படம்:எஸ்.குரு பிரசாத் 
Regional01

சாலை விபத்தில் உயிரிழப்பு அதிகம் மாநகர காவல் ஆணையர் வேதனை

செய்திப்பிரிவு

சேலம் மாநகர காவல் துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் வளைவில் இருந்து பேரணியை தொடங்கிவைத்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பேசியதாவது:

சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம். கடந்த 1995-ம் ஆண்டு எனது சகோதரர் விபத்தில் இறந்து விட்டதால், அந்த வேதனை என்னவென்பதை நான் அறிவேன். எனவே, நாம் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிந்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் செந்தில், சந்திரசேகர், போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT