அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படும் பகுதிகளை அகழ்வாராய்ச்சி இணை இயக்குநர் சிவானந்தம் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகலை மற்றும் கொடுமணல் ஆகிய இடங்களைத் தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் உட்பட மேலும் 3 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 இடங்களில் பிப்ரவரி 2-வது வாரம் அகழாய்வு செய்யும் பணி தொடங்க உள்ளது.
இந்நிலையில், இப்பகுதி களை நேற்று ஆய்வு செய்த தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி இணை இயக்குநர் சிவானந்தம், இன்று (ஜன.22) முதல் ஆளில்லா விமானம் மூலம் இப்பகுதிகளில் ஆராய்ச்சி பணி தொடங்க உள்ளதாகவும், பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி அதன்பிறகு அகழ்வாராய்ச்சி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.