Regional01

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பெண்கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகை மற்றும் சாதி சான்றிதழ் வாங்குவதில் உள்ள இடர்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அமைப்பின் மாநிலச் செயலாளர் சோ.முருகேசன், மாவட்டச் செயலாளர் செ.பால்ராஜ், தலைவர் பி.ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் மு.பிரமநாயகம், சேரன்மகாதேவி வட்டாரப் பொருளாளர் அமுதா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT