Regional01

கடம்பன்குளம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் கவுரவிப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் கணேசன், உதவி தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாரண ஆசிரியர் முத்துக்குமார் வரவேற்றார்.

பள்ளியில் சிறப்பாக தேர்ச்சி அளித்து வரும் ஆசிரியர்கள், பள்ளி செயல்பாடுகளில் ஆர்வமுடைய ஆசிரியர்களை நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன் கவுரவித்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் சுபாஷ், முகமதுஅலி தீன், ஆய்வக உதவியாளர்கள் வீரப்பன், குமார் ஆகியோர் ஏற்பாடுகளை. கணித ஆசிரியர் ஆவுடையப்பன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT