மாதாந்திர உதவித்தொகை கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட முதியோர். 
Regional01

உதவித் தொகை கேட்டு முதியோர் முறையீடு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர உதவித் தொகை கேட்டு ஏராளமான முதியோர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதி யிலுள்ள கொத்தன்குளம் கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதியோர் உதவித் தொகை கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு இதுவரை உதவித் தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட முதியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக தனித்தனியாக மனுக்களையும் அவர்கள் வழங்கினர்.

SCROLL FOR NEXT