Regional01

விடுதலை சிறுத்தை கட்சியினர் நெல்லையில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப்பெற வலியுறுத்தியும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்ற வலியுறுத்தியும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையமுன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் கரிசல் மு.சுரேஷ், தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளர் விமல், திருநெல்வேலி மக்களவை தொகுதி செயலாளர் அரசு பிரபாகரன், சட்டப் பேரவை தொகுதி செயலாளர்கள் ரா.பாஸ்கர், ஈழவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT