திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் ஜனவரி 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களின் சுய விவரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்துக் கல்விச்சான்றுகள் மற்றும் நகல்களுடன் கலந்துகொண்டு பயன் அடையலாம் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.