Regional01

அங்கன்வாடி ஊழியர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் வெங்கடேசபுரத் தில் உள்ள அங்கன்வாடி மைய வட்டார அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டாரத் தலைவர் வ.தனம் தலைமை வகித்தார். வட்டார நிர்வாகிகள் கே.விஜயலட்சுமி, டி.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம், முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல, ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டாரங்களிலும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT