தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டார். படம்: என்.ராஜேஷ் 
Regional02

தூத்துக்குடியில் பெண் வாக்காளர்கள் அதிகம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 14,81,799 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்வெளியிட்டார். எம்எல்ஏ பெ.கீதாஜீவன் பெற்றுக் கொண்டார். ஆட்சியர் கூறியதாவது:

மாவட்டத்தில் 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில், 54,211 மனுக்கள் பெறப்பட்டன. 53,246 மனுக்கள் ஏற்கப்பட்டு, அவர்களது பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள் என 15,879 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன.

இறுதி வாக்காளர் பட்டியலின் படி, 7,24,484 ஆண்கள், 7,57,151 பெண்கள், 164 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,81,799வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 1,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு வரும் 25-ம் தேதி தேசியவாக்காளர் தினத்தன்று வாக்காளர்புகைப்பட அடையாள அட்டைகள்வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.

SCROLL FOR NEXT