TNadu

ஆயுதப்பயிற்சி வழக்கில் 7 பேர் விடுதலை

செய்திப்பிரிவு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி பொய்யாவெளியில் 2008-ல்மாவோயிஸ்ட்கள் சிலர் ஆயுதப்பயிற்சி மேற்கொள்வதாக கிடைத்த தகவலில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் தருமபுரியைச் சேர்ந்த நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.ரஞ்சித், நீலமேகம், கண்ணன், பகத்சிங், ரீனாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, காளிதாஸ் ஆகியோர் கைதாகினர்.

இவ்வழக்கில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா நேற்று தீர்ப்பளித்தார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நீதிபதி ஜமுனா தனது தீர்ப்பில், “ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்படாததால் 7 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT