திருப்பூர் பெரியார் காலனி கருப்பராயன் கோயில் வீதியைச் சேர்ந்த நாட்டரசன் என்பவரின் மனைவி மலர்க்கொடி (40). பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகள் பிரியா (17). அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கரோனா ஊரடங்குக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பிரியா பள்ளிக்கு செல்லவில்லை என தெரிகிறது.
வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய தாயார் கேட்டபோது, இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மலர்க்கொடி சாணிப்பவுடர் குடித்துள்ளார். இதையறிந்த பிரியாவும் சாணிப்பவுடரை குடித்துள்ளார். இருவரும் வீட்டிலேயே உயிரிழந்தனர்.
இருவரது சடலங்களையும் அனுப்பர்பாளையம் போலீஸார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.