Regional03

மனைவி கொலை கணவருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குப்பிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் சசிகுமார்(38). இவ ரது மனைவி மல்லிகா(25). சசிகுமார் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட தகராறில் சசி குமார், மனைவி மல்லிகாவை கொலை செய்தார். இது குறித்து விளாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி புருஷோத்தமன் நேற்று தீர்ப் பில் சசிகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

SCROLL FOR NEXT