Regional02

மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படுவதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம்

செய்திப்பிரிவு

ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை அமல்படுத்த பயோமெட்ரிக் முறை கடந்த நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

பயோமெட்ரிக் முறையில் கைரேகைகளை பதிவு செய்த பின்னர், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். ஆனால், பயோமெட்ரிக் இயந் திரத்தில் கைரேகையை பதிவு செய்யும்போது அதிக காலதாமதம் ஏற்படுகிறது.

மேலும், இணையதளத்தின் வேகம் குறைவாக இருப்பதால், பொதுமக்கள் பொருட்களை வாங்க நீண்டநேரம் ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கபிஸ்தலம், பாபநாசம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதி களில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையால் பொருட்கள் வாங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், அடிக்கடி பொதுமக்களுக்கும், ரேஷன்கடை பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது வாடிக் கையாக உள்ளது.

இதுகுறித்து சில ரேஷன் கடை பணியாளர்கள் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1,185 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது சர்வர் வேகம் குறைவாக இருந்ததால் பணியாளர்கள் பலரும் சிரமப்பட்டோம். இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பயோமெட்ரிக் முறை வேண்டாம் என அரசு கூறியது. அப்போது வழக்கமான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆனால், தற்போது ரேஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படுகிறது. கடந்த 2 நாட்களாக சர்வர் பிரச்சினை காரணமாக பயோமெட் ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் வழங்க முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே, சர்வரில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் அல்லது அதிவேக இணைப்புகளை சர்வரில் பொருத்த வேண்டும். அதுவரை பழைய முறைப்படியே ரேஷனில் பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT