Regional02

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை திமுக எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் மழையால், 2 லட்சம் ஏக்கரில் அறு வடைக்கு தயாரான சம்பா பயிர் கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந் துள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் அருகே சுங்கான்திடல் பகுதியில், தொடர் மழையால் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி முளைக்கும் நிலையில் உள்ள நெற்பயிர்களை தஞ்சாவூர் தொகுதி திமுக எம்எல்ஏ டிகேஜி. நீலமேகம் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியது: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை முழுமையாக கணக்கெடுத்து, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT