கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 டன் எடையுள்ள மஞ்சள் மற்றும் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி மடத்தூர் அருகேயுள்ள ஒரு கிட்டங்கியில், கியூ பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அங்கிருந்த ரூ.6.60 லட்சம் மதிப்பிலான 11 டன் மஞ்சள்மற்றும் ரூ.4.75 லட்சம் மதிப்பிலான 5.95 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.