Regional01

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

செய்திப்பிரிவு

குடியாத்தம் நகரைச் சேர்ந்த சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவரை, சாராய வழக்கில் குடியாத்தம் நகர காவல் துறையினர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர் மீது ஏற்கெனவே சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால், விஜயகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரை செய்தார்.

இதனையேற்று, விஜயகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT