காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. 
Regional02

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தயார் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆய்வு

செய்திப்பிரிவு

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா பரவல் தீவிரமானதால் கடந்த ஆண்டு மார்ச் 3-வது வாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. இன்று (ஜன.19) முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் 222 உயர் நிலைப் பள்ளிகள், 243 மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நீண்ட இடை வெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறை என அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விழுப்புரம்

அப்போது பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிவறை சுத்தமாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? எனவும் பார்வையிட்டார். மாணவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர் கருவி மற்றும் அவர்களின் பயன்பாட்டுக்காக முகக்கவசம், சோப்பு, சானிடைசர் திரவம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவு றுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உடனிருந்தார்.

SCROLL FOR NEXT