நெய்வேலியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் பேசினார். அருகில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கணேசன் எம்எல்ஏ. 
Regional02

நெய்வேலி என்எல்சியில் அப்பரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் வேலை கேட்டு குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

நெய்வேலி என்எல்சியில் அப்பரண் டிஸ் பயிற்சி பெற்றவர்கள் வேலைவேண்டி குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அப்பரண்டிஸ் பயிற்சி பெற்று உள்ளனர். இவர்கள் பயிற்சி பெற்று கடந்த 24 ஆண்டுகளாகியும் இது நாள்வரை என்எல்சி நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் பணி வழங்கக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பணி வழங்கக்கோரி நேற்று நெய்வேலி மத்தியபேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணாதிடலில் அப்பரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் குடும்பத்தோடு பதாகைகளை ஏந்தி வெயிலில் காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடலூர்மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கணேசன் எம்எல்ஏ, நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந் திரன் புவனகிரி, எம்எல்ஏ சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அரசியல்கட்சியினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT