Regional02

1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

செய்திப்பிரிவு

போச்சம்பள்ளி அருகே 1600 கிலோ ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போசம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் திருநாவுக்கரசு, பொறியாளர் தனசேகரன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கிராமபுறங்களில் சோதனை நடத்தி வருகின் றனர். '

பட்டகப்பட்டி கிராம பகுதியில் வாகனத்தணிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், அவ் வழியே சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தினர். அதிகாரிகளைப் பார்த்ததும், வாகனத்தை நிறுத்திவிட்டு காரில் இருந்தவர் கள் தப்பியோடினர். வாகனத்தை சோதனையிட்ட அலுவலர்கள், காரில் 1600 கிலோ ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து அரிசியுடன், காரை பறிமுதல் செய்த அலுவலர்கள், போச்சம் பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT