Regional02

எம்எல்ஏ தலைமையில் மக்கள் மறியல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் பல நாட்களாக கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடும் நிலையில் உள்ள புதை சாக்கடையை சீரமைக்கக் கோரி எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனி, கல்லுகுளம் ஆகிய பகுதிகளில் புதை சாக்கடை நிரம்பி, சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதை சீரமைக்க வலியு றுத்தி அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவ டிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, முனியாண் டவர் காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு புதை சாக்கடையிலிருந்து வழிந் தோடிய கழிவுநீர் 2 வீடுகளுக்குள் புகுந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று திரண்டு, நாஞ்சிக் கோட்டை சாலையில் முனியாண் டவர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், நகர காவல் துணை கண்காணிப்பாளர் பாரதிராஜன், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தர் ஆகியோர் சென்று பேச்சு வார்த்தை நடத்தியதால், போராட் டம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT