தூத்துக்குடியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டுத்திருமணத்தை ஆயர் ஸ்டீபன் ஆண்டகை நடத்தி வைத்தார். 
Regional02

மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச கூட்டுத்திருமணம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி சில்வர்புரம் லூசியாமாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுமையம் சார்பில், 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நேற்று இலவச கூட்டுத் திருமணம் நடை பெற்றது.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்தப்பட்டது. இதில்,இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி, 5 ஜோடிகளுக்கு திருமணம் முடிவானது. இவர்களுக்கு நேற்று இலவச திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை, தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்ஸ்டீபன் ஆண்டகை நடத்தி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே.பி.பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு ஜோடிக்கும் தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், டிவி, கட்டில், மெத்தை, பீரோஉள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்ல இயக்குநர் அருட்தந்தை ஜான் எஸ்.செல்வம் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT