ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. தொடர்ந்து, தினசரி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 32-வது சாலை பாதுகாப்பு விழா கொண் டாட்டம் நேற்று தொடங்கியது. சாலை பாதுகாப்பு குறித்து அரசு போக்குவரத்துத் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங் கள் சார்பில் ஒரு மாத காலம் வரை சாலை பாதுகாப்பு விழா கொண்டா டப்படவுள்ளது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள், தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் பள்ளி, கல்லூரி களில் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே 32-வது சாலை பாதுகாப்பு விழா கண்காட்சி பேருந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் நடேசன், பொன்னுபாண்டி, கலைசெல்வன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்தி வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
ராணிப்பேட்டை
இதில், சார் ஆட்சியர் இளம் பகவத், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், ராணிப் பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்
இந்த பேரணியில் காவல் துறையினர், ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர், இரு சக்கர வாகன விற்பனையாளர்கள், பொதுமக்கள் என 450-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், இரு சக்கர வாகனங் களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வுகளை வாகன ஓட்டிகளிடம் எடுத்துக்கூறி ஆட்சியர் சிவன் அருள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, டிஎஸ்பி தங்கவேலு, காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.