திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் கோமுட்டி தோட்டம் பகுதியி லுள்ள புளியமரத்தில் இளைஞர்தூக்கிட்ட நிலையில் இறந்துகிடப்படாக கிடைத்த தகவலின்பேரில், பெருமாநல்லூர் போலீஸார் சென்று ஆய்வு செய்தனர்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தூக்கிட்டு இறந்துகிடந்துள்ளார். சடலத்தை மீட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் யார், எந்த ஊர், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.