அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூர் மாவட்டம் அவிநாசி முத்துசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பி.தனபால்(55). ஆட்டோ ஓட்டுநான இவர், மனைவியை பிரிந்து தாயாருடன்வசித்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ளவர். மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. நேற்று அதிகாலை பிரசித்தி பெற்றஅவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் முன்பு உள்ள தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். சடலத்தை போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.