Regional01

கடலில் சிக்கிய சிறுவன் மாயம்

செய்திப்பிரிவு

மரக்காணத்தை அடுத்த கூனி மேடு கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் பிரபு(16).இவர் அதே பகுதியில் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் நொச்சிக்குப்பம் கடல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை யில் பிரபு சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்த மீனவர்கள், கடலில் இறங்கி தேடியும் பிரபு கிடைக்கவில்லை. மாயமான மாணவனை கடலோர பாதுகாப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT