Regional02

சிவகங்கை அருகேவீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே சின்ன பொன்னாம்பட்டியைச் சேர்ந்தவர் அழகம்மாள் (85). அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வீட்டில் அழகம்மாள் தூங்கிக் கொண்டிருந்தபோது மண் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அழகம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏற்கெனவே வீடு இடிந்து விழுந்ததில் தேவகோட்டை அருகே அனுக்கனேந்தலைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இதுவரை மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் இறந்துள்ளனர். தொடர் மழையால் மொத்தம் 220 வீடுகள் சேதமடைந்துள்ளன.

SCROLL FOR NEXT