Regional01

அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை இல்லை அமைச்சர் கருப்பணன் கருத்து

செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சியில் ரவுடியிசம், கொலை, கொள்ளை இல்லை, என சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். பவானியில் அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், தமிழகம் மோசமான நிலைக்கு சென்று இருக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தற்போதைய அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் மூலம், 50 சதவீதம் வீட்டுச் செலவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் ரவுடியிசம், கொலை, கொள்ளை, கந்துவட்டிக் கொடுமை இல்லை. எம்ஜிஆர் பெயரைச் சொன்னால், மக்களிடம் மரியாதை கிடைக்கும் என கமல்ஹாசன் சொல்லி வருகிறார். ஆனால் வெற்றி பெற முடியாது, என்றார்.

SCROLL FOR NEXT