சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவுக்கு, கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அறிக்கையை வாசித்தார்.
கனடா நாட்டின் டொரண்டொ பல்கலைக் கழக பேராசிரியர் லட்சுமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 10 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 39 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கி பேசினார்.
விழா பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கல்லூரியின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில், முதன்மை விருந்தினர்களாக ஜே.எஸ்.டபிள்யூ பொதுமேலாளர் அம்ரோஸ், கேப்ஜெமினி நிறுவன தலைமை அதிகாரி முரளி சங்கர நாராயணன், எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவன தலைமை நிர்வாகி அமர்நாத், டயானா சாப்ட்வேர் நிறுவன தொழில்நுட்ப ஆலோசகர் ரத்தன் ராவ் பதுர், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட துணை ஆட்சியர் தர்மலா ஆகியோர் கலந்து கொண்டு 1,271 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
விழாவில், சோனா கல்விக் குழும முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.