Regional02

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

செய்திப்பிரிவு

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜன.23-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வது, ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியை நடத்துவது, தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT