நெய்வேலியில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சபா ராஜேந்திரன் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
Regional01

மாற்றுத்திறனாளிகளின் சமத்துவ பொங்கல்

செய்திப்பிரிவு

நெய்வேலி ராம்நகர் பூங்காவில் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3 ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் கலந்து கொண்டுமாற்றுத் திறனாளிகள் 350 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் பாலமுருகன், மாற்றுத் திறனாளி சங்கங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைவர் குமார், செயலாளர் குமரவேல், ரங்க நாதன், சந்தோஷ், சையத் முஸ் தாபா மற்றும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, தமிழரசன், தொமுச பேரவைதுணை செயலாளர் வீர ராமச் சந்திரன், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT