வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் நட்சத்திர வனம் அமைக்கும் பணி நடை பெற்றது.
மார்கழி உற்சவம் முடிவடைந்த நிலையில், வில்லிபுத்தூரில் ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுத்த ஆடிப்பூர நந்தவனத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மதுரை தென்மண்டல ஐஜி முருகன், சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார், வில்லிபுத்தூர் டிஎஸ்பி நமசிவாயம், கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.