ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மோகன்(24). இவரது நண்பர் மாரி மகன் பால் பாண்டி(24). இருவரும் நேற்று முன்தினம் இரவு கேணிக்கரை பகுதியிலிருந்து தேவிபட்டினம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது பேராவூர் திரும்பும் வளைவில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருவரும் படு காயமடைந்து சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.