மோர்ப்பண்ணை கிராமத்தில் கடல் தொழில் சிறக்க நடைபெற்ற சப்தகன்னி பொங்கல் விழா ஊர்வலம். 
Regional02

உப்பூர் அருகே சப்தகன்னிகள் மூலம் பொங்கல் வைத்து வழிபாடு

செய்திப்பிரிவு

தைப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் 7 சிறுமிகளும் சேர்ந்து கோயில் முன் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் 7 சிறுமிகளுக்கும் கிராமத்தின் சார்பில் மாலை அணிவித்து, கும்ப மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கிராம மக்களுடன் சிறுமிகள் கடற்கரைக்கு ஊர்வலமாகச் சென்றனர். அங்கு கிராமத்தின் சார்பில் செய்யப்பட்ட மாதிரி படகில் கடல் மாதாவுக்குப் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். நிகழ்ச்சிக்கு கிராமத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் முருகவள்ளி, முன்னாள் கிராமத் தலைவர் பாலன் உள்ளிட்ட கிராம கமிட்டியினர், கிராம மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT