Regional01

நிவாரணம் வழங்கக் கோரிவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் மழையால் நெல்,பருத்தி, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களும் பாதிக்கப் பட்டுள்ளன.

இதனை அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி பிள்ளையார் பாளையம் கிராமத்தில் விவசாயிகள் வயலில் இறங்கி நின்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் தியாகராஜன், விவசாயிகள் திருஞானம், சண்முகம், பட்டுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT